Friday, May 4, 2012




(மூமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள். அல்குர்ஆன் 24:56
    மேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறைவன் தொழச் சொல்கிறான். ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரக்அத்துகள் தொழவேண்டும் என்றோ எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டுமென்றோ விளக்கவில்லை. அதை விளக்கும் கடமையை தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற்பகுதியில் “அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிபடுங்கள்” என்று இறைவன் கூறுகின்றான். எனவே, நாம் தொழ வேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னா அடங்கிய ஹதீஸ்களைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
    (நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44
    என்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண் பெண் உறவு, திருமணம், வியாபாரத் தஒடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தைகளால் விளக்கியும், செயல்படுத்தி காட்டியும் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். குர்ஆன் பொதுவாக “தொழுகையை நிறைவேற்றுவீர்களாக!” என்று கட்டளை பிறப்பிக்கிறது. அந்த தொழுகையை நிறைவேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரக்அத்துகள், ருகூவு, சுஜூது போன்றவைகள் ஸுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஸ்களே நமக்கு விளக்கமளிக்கிறது; குர்ஆனல்ல.
   

வேண்டாம் இந்த வரன்...........



விலை கொடுத்து வாங்கி வைத்து 
வினோதமாய்க் குடும்பம் நடத்த..
விருப்பமில்லை எந்தனுக்கு...........
பெண்ணுக்கு அடிபணிந்து................
தலை குணிந்து சேவை செய்யும்
தரம் கெட்ட மாப்பிள்ளையை........
கரம் பற்ற விருப்பமில்லை..............

பெண்ணுக்கே பெருமை சேர்க்கும்
பெருந்தகைக் குணமும் உண்டு......
குடும்பத்தைக் கோயிலாக்கும்.........
குறையாத மனமும் உண்டு...............
விரும்பி எனை ஏற்க வென்றால்.....
விரைந்து நீயும் பதிலனுப்பு...............

ஆண்மைக்கே அழகு சேர்க்கும்.......
லட்ஷணங்கள் இருந்து விட்டால்.
லட்சங்கள் தேவையில்லை ............
தனித்து நான் வாழ்ந்தாலும்..............
தரம் கெட்ட சீதனத்தால்......................
சீரளிய விருப்பமில்லை......................

லட்சங்கள் பல கொடுத்து ...................
அவலட்ஷன வாழ்க்கை வாழ...........
ஆசையில்லை எந்தனுக்கு.................
கூழ் குடித்தாவது கூடி மகிழ்ந்து......
குடும்பம் நடத்த......................................
..குறையில்லாதவன் வேண்டும்.......

காணி வீடு கார் என்று.........................
கடன் பட்டு கொடுத்துதவ................
நாதியில்லை எந்தனுக்கு.................
இத்தனையும் இருந்து விட்டால்
தனி மரமாய் நானின்று....................
தலை நிமிர்ந்து வாழ்ந்திடுவேன்.

சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.


வாழ்க்கை வாழ்வதர்க்கே . . .. . . .





வாழ்க்கை வாழ்வதர்க்கே என்றால் ...எப்படி வாழவேண்டும் .....எப்படியும் வாழலாம் என்று இருந்து விடலாமா . . .வாழ்க்கையை சுவாரஷ்யமாக வைத்திருப்பதென்பது கடினமான காரியமல்ல..........வாழ்க்கையை சிலர் விழையாட்டாக நினைக்கின்றார்கள்...........எப்படியும் வாழ்ந்து விட்டுப் போவோம் என்று பிடிப்பில்லாமல் வாழ்கிறார்கள்......
ஒவ்வொருவரும்ஓரே இடத்தில் இருந்துதான் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.......இடையிடையே துன்பமும் துயரமும் தவறுகளும் தண்டனையும்..தோல்விகளும் வரத்தான் .செய்கிறது....விளையாட்டைப் போல அனைத்தையும் தாண்டி வாழ்வதில்.பல வற்றைக் கற்றுக்கொள்கிறோம்.....அனுபவப் படுகிறோம் ......படிப்பினை பெறுகிறோம்...
வயது ஆக ஆக.நமது முதிர்ச்சிக்கு ஏற்றாப்போல்..வாழ்க்கையை கற்றுத் தேறுகிறோம் . . .. .
விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது போல்
வாழ்க்கையில் தோற்றுப் போகக் கூடாது....................
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பொறுமையாக புரிந்துணர்வுடன்செயல் பட வேண்டும் "வாழ்க்கைஎன்பது ஒரு போர்க்களம்.என்றும் வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு என்றும் " சொல்லக்  கேட்கிறோம்...உண்மை தான் போராடி ஜெயிப்பது தானே வாழ்க்கை . .. . .எத்தனையோ தோல்விகளை இன்னல்களை தாண்டித்தானே வெற்றி கிடைக்கிறது....இந்த வெற்றி நமது போராட்டத்திர்க்கு கிடைத்த மகிழ்ச்சி தானே.......வாழ்க்கையை தவறான நோக்குடன்.....தவறான முறையில் கையாழுவதால் தான் பலர் தோற்றுப் போகிறார்கள்..........

'வாழ்க்கை மறைபொருளாக இருக்கிறது ..
அதனால்தான் அது அழகாக இருக்கிறது.'


சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை.
..


Wednesday, May 2, 2012

தொடர்கதை .........





இன்னும் பூக்கும்
என் பூந்தேட்டத்தில் ..
நறுமணம் வீசும்
மலர்களின் வாசனை
தொடர் கதையாய் . ..

என் உதிரத்தின்
ஒளி விளக்காய்
எனைச் சுமந்தவள்
தந்தை என்ற உறவை
அறிமுகப் படுத்தி
சேயாக எனைத் தாளாட்டி
தாயாக நான் மாறி
தனயனுக்குறவாகி . .
பேரக் குழந்தைக்கு துணையாகி
துன்பம் துயரம்
எதிலும் சலைத்திடாது
உறவைப் பேணி
உவகையுடன்
தொடரும் சொந்தங்கள்
எப்போதும் தொடர் கதைதான் . .. .

தலைமுறை தலைமுறையாய்
வழித்தோன்றலின்
மறு பிறவியாய் . .....
புது வரவில் புது உறவாய் . .
மணம் பரப்பி நிற்கும் . .
சோலைவனம்  ........
சொந்தங்கள் தொடர் கதைதான் . . . .

சுஹைதா ஏ.கரீம் . ..





புன்னகையின் அர்த்தம் . . . . .




மடுவத்தில் எங்களை  
மகிழ்வாக விட்டுவிட்டு
மனச்சுமையுடன் 
மலையேறி 
மாலை வரும் அம்மாக்களே.
எங்கள் புன்னகையால் 
உங்கள் புன்பட்ட மனதை
எங்களை அரவனைத்து
ஆரத்தழுவி முத்தமிட்டு
முந்தானையால் 
முகம் துடைத்து
அகத்தில் முகம்   
புதைக்கிறீர்கள் . . .
ஆனால்
எங்கள் புன்னகையின்
அர்த்தங்கள் வேறு .. 
எத்தனை நாளைக்கு 
இந்த முத்தம் ..
வளர்ந்து விட்டால் 
வறுமையை காரணம் காட்டி
தலை நகருக்கு 
தாரவாக்கத் தானே 
போகிறீர்கள் . .


சுஹைதா ஏ கரீம் ..


போலிகள் . . . . .


போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் . . 
இது விளம்பரம் . . . 
ஆனால் .உறவுகளுக்குள் இருக்கும்
போலிகளை நம்பித்தானே  
ஏமாறுகிறோம் . . .


சுஹைதா ஏ கரீம்...

இப்படியும் சில உறவுகள் .. ... .






வஞ்சியவள் வரம் வேண்டி
வலைக்கரம் நீட்டி கெஞ்சினாள் .
கொஞ்சம் பொறும் 
கொதித்தெழ வேண்டாமென்றார்..

பாவை எனை ஏமாற்றி
பாதை மாற வேண்டாமென
கோவையவள் குமுறினாள்  . .
கும்பிட்டு அழுதாள் . .. .

நீதி கிடைக்குமென 
நித்திரையில் நினைத்திருந்தாள்.
அன்புக்குரியோர் என்றிருந்தோர்
அம்பலத்தில் எனை விற்றார் , . . 

பொறுமைக் குரியவள்
எனப் போற்றினோர் எலாம்
பொறாமைக் காறியென
தூற்றவும் செய்தனர் . . 

கவலைகள் சொல்லியழுதேன் .. 
கங்கணம் கட்டி விட்டார்
அவளொரு பைத்தியக் காரியென்று . 
நம்ப வேண்டாம் உறவுகளை . . . 

தலைவலியும் காய்ச்சலும்
தனக்கு வந்தால் தெரியுமென்பார்
அனுபவித்தால் தான் புரியும்
அவரவர் வேதனையும் வலியும் . . . . 

  
சுஹைதா ஏ கரீம் . . . . 





Tuesday, May 1, 2012

கண்ணீர் சிந்தும் காதல்...



திரு விழாபோல் முடியுமென்று
எண்ணியிருந்தேன்...
காதல்,
ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறது
என் கண்களில்...

அடையாளம்...



இப்போதுதான்
நாங்கள்,எங்களை
அடையாளம் கண்டு கொண்டோம்
சோதனைச் சாவடி இல்லாத பொழுதுகளில்...

கனவு...



இன்னும் பாதி தூக்கத்தில்தான்
துயில் எழும்புகிறேன்
அன்று பறிக்கப்பட்ட
எங்கள் உணர்வுகளும்,உடமைகளும்
பாம்புகளாகி...
இன்றும் கனவுகளில் கொத்துகிறது...