. .
இன்பமான இல்லாழ்வு வாழ வேண்டுமானால்.கணவன் மனைவி புரிந்துணர்வு
அவசியம் . . .அத்துடன் மிக மிக முக்கியமானது பணம் . .. பணம் இன்றேல் பிணம் தான் . . .என்று சொல்வார்களே . .. ஆமாம் அதில் எத்தனை உண்மை இருக்கிறது . . . .இப்போதெல்லாம் பணம் உள்ளவர்கள் தான் மதிக்கப் படுகிறார்கள் . . ..நேசிக்கப் படுகிறார்கள் . . .பணம் இன்றி வாழ முடியாத நிலை
உறவுகள் எல்லாம் சற்றுத்தொலைவில் தான் . . ..
எவ்வளவு தான் உழைத்துப் போட்டாலும் வருவாய்க்கு மேல் செலவாகத்தான்
இருக்கிறது , , ,உண்மைதான் . .. கணவன் மனைவி இருவர் உழைத்தும் வருமானம் போதாத நிலை . வாழ்க்கைச் செலவு அதிகரித்து விட்டது , , நவ நாகரீக மோகம் தலைக்கு மேல் ஏறிவிட்டது . . ஒருவர் போல் மற்றவர் வாழ வேண்டும் என்ற ஆசை . .. இதனால் தீய வழியில் சம்பாதிப்பு . .. மனித தேவைகளைப் பூரர்த்தி செய்ய மனிதன் இயந்திரமாகின்றான் . . ஆயிரம் ரூபாய்
வருமான முள்ளவன் ஐயாயிரம் ரூபா செலவிருந்தால்.அவன் குடும்ப நிலை என்னாவது . . . கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை மிச்சப் படுத்த தெரிய வேண்டும் . . .இதில் கணவன் மனைவி இருவருமே கலந்து ஆலோசித்து
எதில் சிக்கனப் படுத்துவது எப்படி.ச் ேகரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . . . ..பிள்ளைகளுக்கும் இதை உணர்த்த வேண்டும் . . .
நான் உழைகத்ததெல்லாம் ஊதாரியாக்குகிறாள் மனைவி என்றும் . . . .கணவன் சம்பாதிப்பதில் பாதிதான் வீடு வருகிறது மீதியை கணவன் குடிததுத் தள்ளுகிறான் என்று மனைவியும் இருந்து விட்டால் . . .எப்படி வாழ்வில் முன்னேற முடியும் . . .
வாழ்க்கையில் முன்னோற குறிக்கோள் இருக்க வேண்டும் . . . .இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கட்டுக் கோப்பு வரையறை இருக்க வேண்டும்
முதல் மாதத்தில் கொஞ்சம் செலவாகி விட்டது என்றால் அடுத்த மாதத்தில்
தேவையற்ற செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் . . .
இப்போது இருக்கும் நிலையில் எதில் கட்டுப் படுத்துவது .....என்று கேட்கலாம் . . சாப்பாட்டிலா . .உடையிலா பிள்ளைகளின் பாடசாலை செலவிலா . . ..
எதிலுமே சுருக்க முடியாத நிலை . .. . இதில் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை . .சங்கடம் தான் . . . .
பிள்ளைகளுக்கு சத்தான உணவு தாராளமாகக் கொடுக்கலாம் .குறைந்த விலையில் நிறைந்த உணவைக் கொடுக்கலாம் . .பிள்ளைகளுக்கு ஆடம்பர
வாழ்க்கையைக் காட்டாமல். .வரவு செலவுகளை வளர்ந்த பிள்ளைகளிடம்
பகிர்ந்து கொள்ளலாம் . . ..
புகைத்துத் தள்ளும் கணவன் .சூதாட்டத்தில் பணத்தை தொலைக்கும் ஒருவர்க்கம் . . . . சிற்றுண்டிச் சாலையில் கணக்கை ஏற்றி வைக்கும் கணவன் . .இவர்களின் வீண் செலவைக்குறைக்கலாமே . .. . வீட்டில் வீணே எரியும் மின்சாரம்.நீர் .தொலைபேசி. . . இவைகளை கட்டுப்படுத்தலாம் . . ..பெண்கள் வீட்டில் இருந்த படி தனக்குத் தெரிந்த கைத்தொழில் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் . . . .. .ஒரு பெண் ஒரு குடும்பத்தை சுபீட்சத்தின் இருப்பிடமாக கொண்டு வரலாம் . . .. . ஒருவனுடைய சுபீட்சத்தின் ஆணி வேர்
அவனுடைய மனைவியே . . .
உலகில் பணக்காரனாவதர்க்கும் பணக்காரனாய் வாழ்வதர்க்கும் .ஒரே வழி
பணத்தை ஊதாரித்தனம் செய்யாமல் . . .சிறுகச் சிறுகச் சேமித்து சீராக வாழலாம் . .. சேமிப்புப் ுழக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் . . .பிள்ளைகளுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . .இருப்பதில் திருப்தி கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும் . . ..
மூதூர் சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை .