வாழ்க்கை என்றால் வரவு செலவில்ஒன்றில்லை
வளர் பிறையும் முடிவின்றி வருவதில்லை. . ..
சாதனைகள் தொடராக நிலைப்பதில்லை . . . . .
சாதி சன ஒற்றுமையும் சத்தியமாய் நிலைப்பதில்லை .
உறவுகளுக்குள் ஓயாப் போராட்டம்
ஊடுருவிப் பார்த்தால் . ..
பொறாமையங்கே தலைவிரித்தாடும். . .
குன்று குழி நிறைந்தது தான் வாழ்க்கை
பெருங்குடி மகனாய் வாழ்வதென்றால்
வீழ்ந்து அதில் மீள வேண்டும் . . . . .
கவிஞன் என்றால் ஏழை என்பார் . . .
கற்பனையில் ஏவழயல்ல அவன் . .
வித்தகனாய் மாறுதற்கும் . .
முழு உலகம் பார்ப்பதற்கும் . ..
பஞ்சமில்லைா வார்த்தைகள் . .
கற்பணையில் ஊற்றெடுக்கும் . . . . .
இருந்தும் அவனை வையம் வையும்
சொர்க்கத்தைக் காண்பவனும்
சொத்து சுகம் சேர்ப்பவனும்
தொலைந்து போன நினைவுகளை
தொடர் காவியமாய் தருபவனும்
உள்ளக் கிடக்கைகளை
உவமையுடன்.சேர்ப்பவனும்
கள்ள மில்லா உண்மையெலாம்
கட்சிதமாய் வடிவமைத்து
உணர்வுகளுடன் உறவாடி
உயிர்ப்பித்து அழகு பார்த்து
உணர்த்தசுபவன். . . . .இவன் ..
..................கவிஞன்.............
மூதூர் ......சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தையில் இருந்து. . . . .
No comments:
Post a Comment