சின்னதாய ஒரு சந்தோஷம்
சின்னதாய் ஒரு சஞ்சலம்
சின்னதாய் ஒரு கோபம்
சின்னதாய் ஒரு விரக்தி
சின்னதாய் ஒரு கவலை
சின்னதாய் ஒரு எரிச்சல்
இத்தனையும் நாளுக்கு நாள்
இதயத்தில்
இட்களுக்கும் இன்னல்களுக்கும்
முகம் கொடுத்து
மொத்தமாக சிரித்துக் கொள்கிறேன்
எனக்குள் .
நாளைய நாளின்
நம்பிக்கையில் , ,
மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை
நம்பிக்கைதான் வாழ்கை என்பதை உணர்த்திய-
ReplyDeleteஉன்னத வரிகள்!
வாழ்த்துக்கள்!
நன்றி ..நண்பரே
Deleteஒவ்வொரு விடியல்களும் நம்பிக்கையோடுதான் பிறக்கிறது..உங்கள் கவிதையிலும் நம்பிக்கை இருக்கிறது..
ReplyDeleteஉங்கள் பதில் கண்டேன் சுஹைதா.
ReplyDeleteஉங்கள் ஆக்கங்களை உங்கள் தளத்திலே வெளியிடுவதற்கு "எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமே.." என்று சொல்லியிருப்பது ஏன்? எனக்குப் புரியவில்லை.
அதுசரி, பெண்கள்பற்றி ஆண்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று உங்கள் ஊரைச்சேர்ந்த ஒருவர் வீரகேசரியிலே ஒரு கட்டுரை எழுதியிருப்பதைப் படித்தேன். அதை அனுப்புகின்றேன். வாசித்துவிட்டு -நன்றாக இருந்தால்- உங்கள் தளத்திலே பிரசுரிப்பீர்களா? உங்களுக்கு அனுப்புவதற்குரிய மின்னஞ்சல் முகவரி என்ன?