இன்னும் என்
இதயத்தை
இன்பமாக்கி
ஈரப்படுத்துகிறது
எனது பாட்டி
வாழ்ந்த வீடு.
வியர்வைத் துளிகளால்
கழிமண் குழைத்து
கடுமையான உழைப்பால்
உயரவைத்த கோபுரம்.
ஒவ்வொரு சுவரும்
வெவ்வேறு கதை கூறும்
கண்கள் கலங்கினாலும்
உள்ளம் குளிர்ந்து போகும்
எத்தனை இன்பங்கள்
உறவுகளுக்குள்
அன்புப் பரிமாற்றங்கள்
முற்றத்தில் இருந்து
முழு நிலவை ரசித்தபடி
பாய் விரித்தமர்ந்து
தாத்தா பாட்டி கதைகேட்டு
பாட்டுப் பாடி
பள்ளாங்குழி விளையாடி
நிலாச் சோறூட்டி
உண்டு மகழ்ந்த நாட்கள்
பாதிச் சுவர் வைத்து
பார்த்துப் பார்த்து கட்டியது
வரிசையாய் கம்படுக்கி
கழிமண் குழைத்தழுத்தி
கட்சிதமாய்ச் செய்த மாளிகை
ஓலைக் கூரைக்கிடையே
ஒளியடிக்கும்
ஆங்காங்கே
பகலிலும் இரவிலும்
வெசாக் பண்டிகை போல
சூரியனும் சந்திரனும்
'மாலை நிலா
ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா?'.
பார்துப் பார்த்து
பகலிரவாய் கண்விழித்து
படுத்துறங்க மெத்தை கட்டி
பாய் விரித்தமர
படியும் வைத்து
பக்குவமாய் சமைத்த குடில்
பனை ஓலை வேலியும்
படுத்துறங்கும் படிக்கட்டும்
மாளிகையில் கிடைக்காத
மனநிம்மதியும்
மனதை விட்டு அகல வில்லை
கண்ணுக்குள் மாளிகையாய்
கனவில் வந்து போகிறது.
சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை.
azhakiya kavitha sako!
ReplyDeleteninaivukal vanthu ponathu....
நன்றி.நண்பரே ...
Deleteதமிழ் தெரிந்தவர்கள் நூலாசிரியராக வாய்ப்பு :
ReplyDeleteதமிழ் தெரிந்தவர்கள் நூலாசிரியராக வாய்ப்பு :
சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் புற நானூறு நூல் போன்று இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்தியரின் வாழ்க்கைமுறையை விளக்கும் நூல் ஒன்றினை கீதம் பப்ளிகேசன்ஸ் மூலம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல சிறப்பு விருந்தினர் ஒருவரால் வெளியிட உள்ளோம். இந்த நூலில் ஆசிரியராக இணைய தமிழ் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு
more details : http://www.vahai.myewebsite.com/