எப்போது விடியும்
விரக்தியின் விழிம்பில்
விரைந்து செல்கிறது
வாழ்க்கை
யன்னல் கம்பிகளினூடே
என் பார்வை
தொலைவை நோக்கியபடி
இரவையும் நிலவையும்
எத்தனை நாட்களுக்கு
ரசிப்பது
சில சமயம் வானுக்கு கூட
என் பார்வை
வெறுக்கிறதோ
வெண்ணிலவை
கரு மேகத்தால்
போர்த்திக் கொள்கிறது
என் சித்தியைப் போல
பாதையில் செல்பரை
நான் பார்த்து விடுவேனோ
என்ற அச்சத்தில்
யன்னல் திரைச் சீலையை
மூட்விடுவது போல்
புது விடியலுக்காய்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்து போனேன்
இல்லை...
எனை ஏமாற்றிக் கொண்டேன்
பருவ வயதை எட்டி
பலவருடம் போனபின்னும்
சீதனச் சந்தையில்
விலைபோக முடியாமல்
பலர் முன் காட்சிப் பொருளாய்
அலங்கரிக்கப் பட்டு
அவமானப் பட்டு
இன்னும் முதிர்க் கன்னியாக
முடங்கிக் கிடக்கிறேன்.
மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை
unmayana vidayatha solli irukinka .alakaana varikal ...rompa sinthika vaikum kavihai ithu
ReplyDeleteவேதனையான கவிதை.
ReplyDeleteநன்றி. வாழ்த்துகள்.
சகோதரி!
ReplyDeleteஅருமையான கவிதையான இல்லை-
வேதனையான கவிதை இன்று சமூகத்தில்-
இந்த கொடுமைகள் தொடரவே செய்கிறது!
ஆனாலும் பல இடங்களில் மாறுதலும் தெரிகிறது!
வாழ்த்துக்கள்!
நல்ல கவிதை!
வலிகள் நிறைந்து வார்த்தைகளயாய் வரும் கவிதைகள் மனதை சிந்திக்க வைக்கிறது காத்திரமான கவிதைகள் தரமாய் இருக்கிறது வாழத்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பெயரும் மனித மனங்களிலிருந்து அகலாது..
ReplyDeleteSuhaitha,
ReplyDeleteஇத்தனை சிறப்புகளைக் கொண்டவராக உங்களைச் சொல்லிக்கொள்ளும் நீங்கள், உங்கள் ஆக்கங்கள் அனைத்தையும் முழுமையாக ஏன் இந்த தளத்தில் வெளியிடக் கூடாது? அனைத்தையும் வாசிக்கக் கிடைத்தால்தானே அவற்றின் தரம் மற்றவர்களுக்கும் தெரியவரும்...?